தேர்தலில் போட்டியிடுவேனா? கூட்டணிக்கு ரகசிய அழைப்பு வந்தது: போட்டுடைத்த சீமான்..!

Feb 25, 2024 - 15:23
Feb 25, 2024 - 15:25
தேர்தலில் போட்டியிடுவேனா? கூட்டணிக்கு ரகசிய அழைப்பு வந்தது: போட்டுடைத்த சீமான்..!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும், ஆனால் தான் போட்டியிட போவதில்லை என்றும் கூட்டணியில் சேர தனக்கு ரகசியமாக அழைப்பு வந்ததாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் சாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன் என்றும் தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது என்றும் கூறினார்.

மேலும் அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு தங்களது கட்சி வாய்ப்பளிப்பதாகவும், நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி என்றும் சீமான் கூறினார். இந்தியாவை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தற்பொழுது சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார்.

இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? தேர்தல் வரும் பொழுதுதான் அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை அனைத்தும் நாடகங்கள் என்று சீமான் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய சீமான், வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, என்று எண்ணியே விஜயதரணி பாஜக சென்று இருக்கலாம் என்று கூறினார். கூட்டணியில் சேர தன்னிடம் ரசிகயமாக அழைப்புகள் வந்ததாகவும், அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது என்று சீமான் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போது நிச்சயமாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow