“தந்தை: நேர்மை - மகன்: மேன்மை” - வி. ஏ. ஓ லூர்து ஃப்ரான்சிஸ் மகன் மார்ஷல் சிவில் நீதிபதியாக தேர்வு..!
தூத்துக்குடியில் மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓ-வின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் சேவியர், முன்னதாக மணல் கடத்தலை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர், லூர்து பிரான்சிஸ் சேவியரை அவரது அலுவலகத்திலேயே கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தந்தையை இழந்த சோகத்தில் இருந்து வந்த மார்ஷல் ஏசுவடியான், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மார்ஷல் ஏசுவடியானுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தனது அலுவலகத்திலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் அமரர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்கள் மகன், சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், சிவில் நீதிமன்ற… pic.twitter.com/ws3vxBfzID — K.Annamalai (@annamalai_k) February 18, 2024
தந்தை கொலை செய்யப்பட்ட கடினமான நேரத்திலும், தனது பெரும் முயற்சியால் தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது, தந்தை மீது அவர் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகவும், இளைஞர்கள் அனைவருக்கும் மாபெரும் உத்வேகமாகவும், அமைந்திருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?