அண்ணாமலையார் பக்தர்களே.. தெற்கு ரயில்வே சொன்ன குட்நியூஸ்.. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி ரயில்
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றினை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இனிமேல் தினசரியும் சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நினைத்தாலே முக்கி தரும் தலம். இங்கு மலையே சிவமாக காட்சி தருகிறார். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமாகவும் போற்றப்படுகிறது திருவண்ணாமலை. இந்த ஆலயத்திற்கு தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்கி செல்கின்றனர். அண்ணாமலையார் ஆலயத்தில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் வருவது வழக்கம்.
கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மலை மீது தீப ஜோதியாக ஒளிரும் அண்ணாமலையாரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சித்ரா பௌர்ணமி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு நேரடி ரயில் போக்குவரத்து வசதி இல்லை என்பது மனக்குறையாகவே இருக்கிறது.
தமிழகத்தில் வட மாவட்டங்களில் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை என்பது மிகக் குறைவு. பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மட்டுமே சென்னையில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் ரயில்கள் திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும். அப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
திருவண்ணாமலை மக்கள் நீண்ட நாட்களாக வேலூர் வரை இயக்கப்படும் ரயில்களை திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அண்ணாமலையார் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் ரயில்கள் திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்துடன் மேலும் சில ரயில்களின் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
மே இரண்டாம் தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வண்டி எண். 06033 பாசஞ்சர் ரயில் வேலூருடன் நிற்காமல் பெண்ணாத்தூர் கண்ணமங்கலம் ஒன்னுபுரம் சேதாரம்பட்டு ஆரணி மதிமங்கலம் போளூர் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடையும்.
இதே போல வருமாறு மூன்றாம் தேதியிலிருந்து திருவண்ணாமலை இருந்து விடியற்காலை 4:00 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் வண்டி எண். 06033 காலை 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
இது தவிர விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறையில் வரை இயக்கப்படும் ரயில் திருவாரூர் வரையும் திருச்சியில் இருந்து விருத்தாச்சலத்திற்கு இயக்கப்படும் முறையில் விழுப்புரம் வரையில் சேலத்தில் இருந்து விருத்தாச்ச விருத்தாச்சலம் வரை தினசரி இயக்கப்படும் முறையில் இனி கடலூர் துறைமுகம் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது .
மேலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை இயக்கப்படும் முறையில் திருவாரூர் வரையும் திருத்துறைப்பூண்டியில் இருந்து வாரத்திற்கு 5 நாட்கள் அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு அண்ணாமலையார் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?