"கலைஞர்  நூற்றாண்டு  பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!"

கலைஞர்  நூற்றாண்டு  பூங்காவுக்கான நுழைவு கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Oct 8, 2024 - 10:59
"கலைஞர்  நூற்றாண்டு  பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!"

கலைஞர்  நூற்றாண்டு  பூங்காவுக்கான நுழைவு கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை, கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில் 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.8) திறந்து வைத்தார். 

தமிழ்நாட்டின் இயற்கை ஞழலை பாதுகாத்திடவும். வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கிலும், 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தது. பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சதுப்புநில சூழலியல் பூங்கா, சென்னை செனாய் நகரில் மெட்ரோ இரயில் கட்டுமானத்திற்குப் பின்னர் 18 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்கா, சென்னை கிண்டியில் 30 கேளடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா, திருவண்ணாமலை. ஆதி அண்ணாமலை மலையின் அடிவாரத்தில் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா ஆகிய பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், கோயம்புத்தூர், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா, சென்னை - புழல், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் வரிக்கரைகளில் புதிய பூங்காக்கள் அமைத்து வரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள், ஏற்காடு மற்றும் மாதவரம் பூங்காக்களை தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், பா.ம.க.  தலைவர் அன்புமணி ராமதாஸ் பூங்காவுக்கான நுழைவு கட்டணத்தை குறைக்கும்படி வலியுறுத்தியுள்ளார். “சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது  சரியல்ல.

நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண  ரூ.50,  கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள்  சவாரி விளையாட்டுக்கு  ரூ.50 என  ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க  ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.

செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்.” என வலியுறுத்தியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow