இளையராஜாவின் சொந்த கிராமத்தில் மகள் பவதாரணி உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு ...

இளையராஜாவின் அம்மா சின்னதாய், மனைவி ஜீவாவை தொடர்ந்து, மகளின் உடலும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது

Jan 26, 2024 - 22:02
இளையராஜாவின் சொந்த கிராமத்தில் மகள் பவதாரணி  உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு ...
இளையராஜாவின் சொந்த கிராமத்தில் மகள் பவதாரணி  உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு ...
இளையராஜாவின் சொந்த கிராமத்தில் மகள் பவதாரணி  உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு ...
இளையராஜாவின் சொந்த கிராமத்தில் மகள் பவதாரணி  உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு ...
இளையராஜாவின் சொந்த கிராமத்தில் மகள் பவதாரணி  உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு ...

இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடலை தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

தமிழ் திரைப்பட உலகின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் நேற்று இலங்கையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்பட்டு, சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டு பல்வேறு திரை பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர் ...

இந்த நிலையில் அவரது உடலை தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதற்காக பவதாரணியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், இன்று இரவு 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 5 மணியளவில் லோயர்கேம்ப் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பவதாரணியின் உடலை அடக்கம் செய்யும் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் பண்ணை வீட்டில் பந்தல் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இளையராஜாவின் உறவினர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.

ஏற்கனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா ஆகியோர் உயிரிழந்த போது அவர்களது உடலும் லோயர்கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் தான் அடக்கம் செய்யப்பட்டு, மணிமண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. தற்போது தாயார் ஜீவாவின் சமாதி அருகே பவதாரணி அடக்கம் செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow