Star Review: “கவினுக்காக போகலாம்… ஆனா படம் எப்படி இருக்குன்னா..?” ஸ்டார் டிவிட்டர் விமர்சனம்!

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும், அவர்களது விமர்சனம் பற்றியும் பார்க்கலாம்.

May 10, 2024 - 11:26
Star Review: “கவினுக்காக போகலாம்… ஆனா படம் எப்படி இருக்குன்னா..?” ஸ்டார் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: டாடா வெற்றிக்குப் பின்னர் கவின் நடிக்கும் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அப்படி அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ஸ்டார் திரைப்படம். பியார் பிரேமா காதல் படம் மூலம் கவனம் ஈர்த்த இளன், ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார். கவினுடன் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்ட பலர் நடிக்க, யுவன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஸ்டார் ட்ரெய்லர் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருந்தது. அதேபோல் ஸ்டார் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் இந்தப் படத்துக்கு செம்ம ஹைப் கொடுத்திருந்தது. இதனால் ஸ்டார் படத்துக்கான ஆன்லைன் புக்கிங் தாறுமாறாக காணப்பட்டது. 

இந்நிலையில், இன்று ரிலீஸான ஸ்டார் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. கவின் தடைகளை கடந்து ஹீரோவானாரா இல்லையா என்பது தான் ஸ்டார் படத்தின் ஒன்லைன். அஜித்தின் முகவரி உட்பட பல படங்கள் இதே ஸ்டைலில் வெளியாகியுள்ளன. ஹீரோவாகும் கனவுடன் வலம் வரும் கவின் ஒரு விபத்தில் சிக்கி விடுகிறார். அதனால் கவினின் முகத்தில் காயம் ஏற்பட, அவரது ஹீரோ கனவு கேள்விக் குறியாகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதை காமெடி, காதல், எமோஷனல் என கலந்துகட்டி கொடுத்துள்ளார் இயக்குநர் இளன் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

அதேநேரம் ஏற்கனவே பார்த்துப் பழகிய கதையாக இருந்தாலும், கவின் அதில் துணிந்து நடித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளனர். மேலும், கவினின் நடிப்பு செம்ம கிளாஸ்ஸாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் யுவன் தனது பின்னணி இசையில் உருக வைக்கிறார் என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இவர்களை கடந்து அதிகம் கவனம் ஈர்த்துள்ளது கவினின் அப்பாவாக நடித்துள்ள லால் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இயக்குநர் இளனின் அப்பா ஸ்டில் பாண்டியன் ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுலகில் அடியெடுத்து வைத்தவர். அவரால் ஹீரோவாக முடியாமல் போக, ஸ்டில் போட்டோகிராபரானார். 

அதனால் தனது மகன் இளனை திரையுலகில் அறிமுகம் செய்திட முயற்சி செய்தார். இதனையெல்லாம் ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்டில் பாண்டியன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை அப்படியே ஸ்டார் படத்தின் கதையாக உருவாக்கியுள்ளார் இளன். ஆனாலும் மூன்று காட்சிகளில் ரசிகர்களுக்கு தரமான கூஸ்பம்ஸ் இருக்கும் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இன்னும் சிலரோ ஸ்டார் ஃபீல் குட் மூவியாக உருவாகியுள்ளது என்றும், மலையாள சினிமா ஸ்டைலில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஸ்டார் படம் எதிர்பார்த்தளவில் இல்லையென்றும், கொஞ்சம் சுமார் தான் எனவும் விமர்சனங்கள் கிடைத்துள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow