நெல்லை: மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஓரமாக அப்புறப்படுத்தினர்

Jan 5, 2024 - 17:25
Jan 5, 2024 - 23:05
நெல்லை: மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் தற்கொலை செய்து கொண்ட ஓன்பதாம் மாணவனுக்கு நீதி கேட்டு  பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த நாகராஜன்-மாரியம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் நரேன் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தான்.இந்த நிலையில் நேற்று இரவு நரேன் திடீரென வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை போலீசார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் சிறுவன் நரேன் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் மாணவன் பள்ளி கட்டணம் செலுத்தாததால் சக மாணவர்கள் முன்னிலையில் சிறுவன் நரேனை பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தவும்,அதனால் ஏற்பட்ட மன வேதனையில் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளன்னர்.

எனவே உயிரிழந்த மாணவனுக்கு நீதி கேட்டு பள்ளி முன்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பெற்றோர் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஓரமாக அப்புறப்படுத்தினர்.நெல்லையில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஒரே வாரத்தில் மேலும் ஒரு சம்பவமாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow