கெஞ்சும் காங்கிரஸ்... கழட்டி விடும் TMC!- I.N.D.I.A கூட்டணியில் அடுத்த விரிசல்...

மேற்குவங்கத்தில் போட்டியிட 5 தொகுதிகளாவது வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Feb 24, 2024 - 09:09
கெஞ்சும் காங்கிரஸ்... கழட்டி விடும் TMC!- I.N.D.I.A கூட்டணியில் அடுத்த விரிசல்...

நாடாளுமன்றத் தேர்தல் மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், I.N.D.I.A கூட்டணியில் மேலும் ஒரு விரிசல் விழுந்துள்ளது.   

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. அதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) உட்பட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் வலுவான இருந்த இந்தக் கூட்டணி, தலைமையைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் தொடங்கி, தொடர் சரிவைக் கண்டு வருகிறது. குறிப்பாக நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் போன்றவர்கள் அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து விலகியதால், கூட்டணியில் ஒருமைப்பாடு ஆட்டம் கண்டுள்ளது. 

இதற்கிடையே, தேர்தலில் போட்டியிட கட்சிகள் இடையே நிகழும் தொகுதிப் பங்கீட்டிலும் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் சில கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. மேலும் சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ளது. இந்த நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், மேற்குவங்கத்தில் போட்டியிட 5 தொகுதிகளாவது வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், I.N.D.I.A கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே I.N.D.I.A கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஃபரூக் அப்துல்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow