மத்திய அமைச்சரே மக்களை குழப்பலாமா?- மு.க.ஸ்டாலின் கேள்வி
தவறான,தேவையற்ற பரப்புரைகளை, பொய் செய்திகளை பரப்பி மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.
பொய் செய்தியை பரப்பி மக்களை குழப்பும் செயலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே ஈடுபடுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.அதனைத்தொடந்து திமுக நிர்வாகியின் இல்லத்திருமண விழாவை நடத்தி வைத்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”1967க்கு முன் சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி நடைபெற முடியாத சூழல் இருந்தது. சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தது திமுக அரசு தான்.தற்போது தமிழகத்தில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதும் திமுக ஆட்சியில் தான் என பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கு பக்தி எல்லாம் இல்லை. அதெல்லாம் பகல் வேஷம். உண்மையிலேயே பக்தி இருந்திருந்தால் அவர்கள் திமுக ஆட்சியை பாராட்டி இருக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றுவதற்காக சிலர் பகல் வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். தவறான,தேவையற்ற பரப்புரைகளை, பொய் செய்திகளை பரப்பி மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.
பொய் செய்தியை பரப்பி மக்களை குழப்பும் செயலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே ஈடுபடுகிறார்.எனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பொய் செய்தியை பரப்பிய போலீஸ் அதிகாரி மீது வழக்கு போட்டுள்ளேன். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைக்கின்றனர்” என்றார்.
What's Your Reaction?