நண்பனை இழந்த அஜித் - வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்!

நண்பனை இழந்த அஜித் - வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்!

கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு,  நடிகர் அஜித்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி, சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமி 9 நாள் தேடுதலுக்கு பின், நேற்று திங்கட்கிழமை [12-02-23] சடலமாக மீட்கப்பட்டார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித்தும் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

அஜித்தும், வெற்றி துரைசாமியும் நண்பர்கள் எனக் கூறப்படும் நிலையில், அவரது மறைவு அஜித்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் பண்ணை வீட்டிற்கு சென்ற அஜித்குமார்,  சைதை துரைசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow