டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்குவது குறித்த வழக்கு- டிச.13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விபத்தில் சிக்கிய இருசக்கரம் வாகனத்தை திரும்ப பெறுவது குறித்த வழக்கு விசாரணை, டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Nov 30, 2023 - 11:59
Nov 30, 2023 - 14:37
டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்குவது குறித்த வழக்கு- டிச.13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

யூடியூப் சேனலை முடக்குவது சம்பந்தமான வழக்கில்  பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.வழக்கு விசாரணை டிச.13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிடிஎஃப்  வாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்து வழக்கு விசாரணை நேற்று நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.வழக்கு விசாரணைக்காக டிடிஎஃப் வாசன்  நீதிமன்றத்தில் ஆஜரானார்.

யூடியூப் சேனலை முடக்குவது சம்பந்தமாக டிடிஎஃப் வாசன் தரப்பு நேற்று விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விளக்கம் தருவதற்கான எந்தவிதமான ஆவணங்களையும் காவல்துறையினர் வாசனுக்கு தரவில்லை என டிடிஎஃப் வாசன் வழக்கறிஞர் வாதிட்ட நிலையில், நீதிபதி இனியா கருணாகரன், வழக்கு விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதி ஒத்திவைத்தார்.

மேலும் காவல்துறையினர் உடனடியாக வழக்கு சம்பந்தமான நகல் ஆவணங்களை டிடிஎஃப் வாசன் தரப்பிற்கு வழங்கவும் உத்தரவிட்டார்.மேலும் டிடிஎஃப் வாசன் தரப்பு விபத்தில் சிக்கிய இருசக்கரம் வாகனத்தை திரும்ப பெறுவது குறித்த வழக்கு விசாரணையும், டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow