புதிய உச்சத்தை எட்டிய மின் நுகர்வு... 440.89 மில்லியன் யூனிட்டாக பதிவானது…

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், தமிழ்நாட்டின் மின்சார நுகர்வானது புதிய உச்சமாக 440.89 மில்லியன் யூனிட்டை தொட்டதாக என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Apr 6, 2024 - 02:13
புதிய உச்சத்தை எட்டிய மின் நுகர்வு... 440.89 மில்லியன் யூனிட்டாக பதிவானது…

ஆண்டுதோறும் கோடை காலங்களில், வெயிலின் தாக்கம் காரணமாக மின் நுகர்வு சதவீதம் அதிரித்து வருவது வாடிக்கையாகவே உள்ளது. தற்போதும் கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில்,  மின்சார நுகர்வானது புதிய உச்சமாக 440.89 மில்லியன் யூனிட்டை எட்டியதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச் 29ஆம் தேதி வரை தமிழகத்தின் தினசரி மின் நுகர்வானது, 426.44 மில்லியன் யூனிட்டாக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி 430.13 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. 

 

தொடர்ந்து மின் நுகர்வானது அதிகரித்து வந்த சூழலில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் மின் நுகர்வானது புதிய உச்சமாக 440.89 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. இது முன்னர் (03.04.2024) தொட்ட அளவான 19413 மெகா வாட்(தேவை) மற்றும் 435.85 மில்லியன் யூனிட் (பயன்பாடு) விட அதிகம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow