கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. அதிர்ந்த நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவர்களும் பங்கெடுத்ததால் பரபரப்பு.

Mar 29, 2024 - 13:45
கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. அதிர்ந்த நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் திருமருகல் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவர்களும் பங்கெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி கோட்டப்பாடி, குருநாதபுரம் 2 கிராம மக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 15 ஆண்டுகளாக சாலை சேதமடைந்துள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரிக்கு செல்வோர் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுநாள் வரையும் எந்தவித கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கிராம மக்கள் வேதனையடைகின்றனர்.

தங்களுடைய கிராமங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், கிராம மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரும் வரை, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும், இன்று எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றியுள்ளனர். மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி கிராம மக்கள் தெருக்களில் நோட்டீஸ் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow