பகலில் சுட்டெரிக்கும் வெயில்.. மாலையில் ஜில்லென்று பெய்யும் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்

சென்னை: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Jun 22, 2024 - 14:46
பகலில் சுட்டெரிக்கும் வெயில்.. மாலையில் ஜில்லென்று பெய்யும் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி கனமழை பெய்து வருகிறது.  
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்,புழல் ARG (திருவள்ளூர்) 5, சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்) , மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு) , வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்) , களியல் (கன்னியாகுமரி) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில்,அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால்   பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி  இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை புதுவையில் 37.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது.வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31° – 37° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34° – 35° செல்சியஸ்,  வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ்,  தென்தமிழக  கடலோரப் பகுதிகளில் 31° – 36° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 19° – 24°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  

அதிகபட்ச வெப்பநிலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 36.5° செல்சியஸ் (-0.5° செல்சியஸ்) மற்றும் மீனம்பாக்கத்தில் 36.7° செல்சியஸ் (-0.5° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,இன்றைய தினம் (ஜூன் 22) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின்  மலைப்பகுதிகள் மற்றும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

23.06.2024: தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின்  மலைப்பகுதிகள் மற்றும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர்,  திருப்பூர், தேனி, திண்டுக்கல்  மாவட்டங்களின்  மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி  மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில்  கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.

26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

22.06.2024 முதல்  26.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2° – 3° செல்சியஸ் இயல்பை விட  அதிகமாகவும்  இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மாலை / இரவு வேளையில்,  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மாலை / இரவு வேளையில்,  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றைய தினம் மன்னார்  வளைகுடா  மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.23.06.2024 முதல் 26.06.2024 வரை: மன்னார்  வளைகுடா  மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் 22.06.2024 மற்றும் 23.06.2024: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.06.2024 முதல் 26.06.2024 வரை: தென்மேற்கு அதனை   ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.லட்சதீவு மற்றும்   அதனை   ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், கேரள -  கர்நாடக கடலோரப்பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.06.2024 முதல் 26.06.2024 வரை: மத்திய அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.லட்சதீவு மற்றும்   அதனை   ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், கேரள -  கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow