டிசம்பர் 29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
வரும் 29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: நாளை (நவ.,27) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நவ.,28ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை கனமழை பெய்யும் என்றும், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும்.
நவ., 29ம் தேதி 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக மிக கனமழை பெய்யும் .
அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
நவ.,30ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
What's Your Reaction?

