மக்களவைத் தேர்தல்: கோடை விடுமுறை நீட்டிப்பு..? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..?
மக்களவைத் தேர்தல் காரணமாக வரும் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் காரணமாக வரும் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகலாம் என தகல் வெளியாகியுள்ளது.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
வரும் கல்லியாண்டில் ஜூன் 5 அல்லது 6 ஆம் தேதி கோடை விடுமுறைப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வழக்கமாக ஜூன் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணத்தாலும் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என தெரிகிறது.
What's Your Reaction?