Thalaivar 171: வெளியானது தலைவர் 171 டைட்டில்… கூலி அவதாரம் எடுத்த ரஜினி… டீசர் எப்படி இருக்கு..?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை: ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த தலைவர் 171 டைட்டில் டீசர் அதிரி புதிரியாக வெளியாகியுள்ளது. ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் கேமியோவாக நடித்திருந்தார் சூப்பர் ஸ்டார். இதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் பிஸியாக காணப்படுகிறார். இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ்ஜுடன் தலைவர் 171-ல் கமிட்டான ரஜினி, விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 171 படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்ஷன் கோரியோகிராபி செய்கின்றனர்.
இந்த அப்டேட்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டாலும் தலைவர் 171 படத்தின் டைட்டில் என்ன, எப்போது ரிலீஸாகும், ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கின்றனர் என்பது தான் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக இருந்தது. வேட்டையன் படப்பிடிப்பு முடிந்த பின்னரே தலைவர் 171 டைட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு இப்போதே சம்மர் ட்ரீட் கொடுத்துள்ளார் லோகேஷ். வழக்கமாக டைட்டில் டீசர் அறிவித்த பின்னர் ஷூட்டிங் செல்வது தான் லோகேஷ் கனகராஜ்ஜின் வழக்கம். அதே பாணியில் தலைவர் 171 படத்தையும் அமர்க்களமாக தொடங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது வெளியான தலைவர் 171 டைட்டில் டீசரில் இப்படத்தின் தலைப்பு கூலி என படக்குழு அறிவித்துள்ளது. எப்போதுமே கஞ்சா கடத்தலை பின்னணியாக வைத்து படம் இயக்கும் லோகேஷ், இந்த முறை தங்கக் கடத்தலில் இறங்கியுள்ளது டீசரில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விக்ரம், லியோ படங்களின் டைட்டில் டீசர் ஸ்டைலிலேயே தலைவர் 171 டைட்டில் டீசரையும் உருவாக்கியுள்ளார் லோகேஷ். அதேபோல் அதே டார்க் ஷேட் கலர் டோனில் கூலி டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ”அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள், தப்பென்னா சரியென்ன எப்போதும் விளையாடு… அடப்பாவி என்பார்கள்… தப்பாக நினைக்காத… எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத…” என நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற ரஜினியின் சித்தாந்த வசனத்தை, கூலி டைட்டில் டீசரிலும் லோகேஷ் வைத்துள்ளது சஸ்பென்ஸாக அமைந்துள்ளது. அதேபோல், அனிருத்தின் பின்னணி இசையில் “டிஸ்கோ” என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் கூலி என்ற அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக இருந்தாலும், நெட்டிசன்கள் நெகட்டிவாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடத்தலை தவிர லோகேஷுக்கு வேறு கதையே தெரியாதா எனவும், இதுவும் விஜய்யின் லியோ படம் போல சொதப்பிடாமல் இருக்க வேண்டும் என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம், இந்தியில் 1983ல் மன்மோகன்தேசாய் இயக்கத்தில் அமிதாப், ரதி நடிப்பிலும், தமிழில் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா நடிப்பில் 1995ம் ஆண்டு கூலி என்ற தலைப்பில் படங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?