எனக்கு ஓட்டு இல்லை... ரொம்ப கஷ்டமா இருக்கு... நடிகர் சூரி வேதனை...

வாக்களிக்க முடியாமல் நடிகர் சூரி வேதனை பதிவு !

Apr 19, 2024 - 17:44
Apr 19, 2024 - 17:49
எனக்கு ஓட்டு இல்லை... ரொம்ப கஷ்டமா இருக்கு... நடிகர் சூரி வேதனை...

சென்னையில் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் மனமுடைந்த அவர், தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை ஜனநாயக கடமையாற்றினர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, யோகி பாபு, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, ஆண்ட்ரியா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றிமாறன், பா.இரஞ்சித், இசையமைப்பாளர் அனிரூத், ஜி.வி.பிரகாஷ், உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். 

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் பெயர், வாக்காளர் பெயர் பட்டியிலில் இல்லாத சம்பவத்தால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த தேர்தலில் கூட தான் வாக்களித்ததாகவும், ஆனால் இந்த முறை தான் வாக்களிக்காமல் போனது மனவேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.  

யாரால் இந்த தவறு நேர்ந்தது என தெரியவில்லை என சூரி வேதனையாக கூறினார். அடுத்த தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிச்சயம் ஆற்றுவேன் எனவும் நடிகர் சூரி உறுதியாக கூறி சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow