தஞ்சை:பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு விவசாயிகள் சோகை உரிக்கும் பணிகளில் தீவிரம்

கரும்பில் உள்ள சோகைகளை உரிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Jan 4, 2024 - 13:25
Jan 4, 2024 - 14:05
தஞ்சை:பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு விவசாயிகள் சோகை உரிக்கும் பணிகளில் தீவிரம்

தஞ்சை அருகே பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு விவசாயிகள் சோகை உரிக்கும் பாணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் வளப்பகுடி, ஒம்பதுவேலி, நடுபடுகை, திருக்காட்டுப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் ஆண்டுதோறும் அரசு  விவசாயிகளிடம் இருந்து கரும்புக்கு உரிய விலை  நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து  நியாய விலை கடை மூலமாக பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் போராடியதின் மூலம் அரசு கொள்முதல் செய்து வருகிறது.

 இந்த நிலையில் இந்த ஆண்டும் அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யுமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கல் நெருங்கி வரும் நிலையில் கரும்பில் உள்ள சோகைகளை உரிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசு இந்த ஆண்டும் விவசாயிகளின் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow