விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கிய ஆருரான் சர்க்கரை ஆலை

மீண்டும் இந்த ஆலை இயங்குவதற்கு கரும்பு விவசாயிகளான நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்

விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கிய  ஆருரான் சர்க்கரை ஆலை

59 லட்சம் நிலுவைத்தொகை வழங்கிய ஆருரான் சக்கரை ஆலை  நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு ஒத்துழைப்பு தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி பகுதியில் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. ஆருரான் சுகர்ஸ் லிமிடெட் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த கொல்லுமாங்குடி சர்க்கரை ஆலை பல வருடங்களாக இயங்காமல் இருந்தது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை  நிலுவையில் இருந்தது.

ஆரூரான் சுகர்ஸ் லிமிடெட்டில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சர்க்கரை ஆலையும், கும்பகோணம் அருகே திருமண்டலக்குடி பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையும் ஆருரான் சுகர்ஸ் லிமிட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.இந்த நிலையில்  2017-2018  மற்றும் 2018-2019 ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டி நீண்ட நாட்களாக கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்ற ஆரூரான் சுகர்ஸ் லிமிடெட் -ன் புதிய நிர்வாக குழு, வழங்க வேண்டிய 53 சதவீதம் மற்றும் ஊக்கத்தொகையும் சேர்த்து 75 சதவீதமாக வழங்க ஒப்புதல் அளித்து கொல்லுமாங்குடி அருகில் உள்ள சர்க்கரை ஆலையில் சுமார் 500-கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு 59 லட்சம் மதிப்பிற்குரிய காசோலைகள் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கரும்பு விவசாயி சண்முகநாதன் கூறுகையில், “எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி நிலுவைத்தொகை மற்றும் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்கிய நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மீண்டும் இந்த ஆலை இயங்குவதற்கு கரும்பு விவசாயிகளான நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் புதுவை முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்  மதியழகன், மாநில பயிர் ரகம் வெளியிட்டுக்குழு உறுப்பினர் கோபி.கணேசன், ஆருரான் சுகர் லிமிடெட் நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் டாக்டர். கந்தசாமி, முன்னாள் மாவட்ட ஆட்சி தலைவர் முனுசாமி,ஆரூரன் சுகர்ஸ் லிமிடெட் நிதித்துறை பொது மேலாளர் உதயகுமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow