மத உணர்வைத் துறந்து ‘லால் சலாம்’ படத்தை வரவேற்ற ரசிகர்கள்..!
மத வேறுபாடின்றி அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை...
ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகும் ‘லால் சலாம்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இஸ்லாமிய தொப்பி அணிந்து சிறப்பு தொழுகை செய்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நாளை லால் சலாம் திரைப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள அலங்கார திரையரங்கத்தில் ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து, கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து மத வேறுபாடின்றி அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து , ரசிகர்கள் அனைவரும் பட்டாசுகள் வெடித்தும், மயிலாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேளதாளத்துடன் நடத்தி நடனமாடியும் மகிழ்ந்தனர்.
மேலும், நிகழ்ச்சியின் இறுதியாக தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணி உள்ளிட்டவைகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்.
இதையும் படிக்க | பட்டா நிலத்தில் மதுரை ஜல்லிக்கட்டு மைதானமா? அரசு எப்படி அத்துமீறி நுழைய முடியும்? - நீதிபதி கேள்வி
What's Your Reaction?