மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம்

Mar 15, 2024 - 03:33
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம்

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கட்சியின் எக்ஸ் பக்கத்தில், “நமது தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி அவரது நெற்றியில் இரத்தம் வழிகிற படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் மம்தாவுக்கு காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. இந்த காயம் எங்கு, எப்படி ஏற்பட்டது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.


நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow