“தேசியக் கல்விக்கொள்கை  மூலம் கல்வித்துறையின் கட்டமைப்புகள் மாறி வருகிறது”

“இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் தேவைகளுக்கேற்ப மாணவர்களைத் தயார்ப்படுத்துவதை தேசியக் கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது”

Oct 24, 2024 - 15:40
“தேசியக் கல்விக்கொள்கை  மூலம் கல்வித்துறையின் கட்டமைப்புகள் மாறி  வருகிறது”

திருவள்ளூரில்  ‘பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள்' என்ற   தலைப்பில் சர்வதேச  கருத்தரங்கு நடைபெற்றது. அதில்  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.  பின்னர், நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை எடுத்துரைத்தார்.

அப்போது, 2013-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் 10-வது  இடத்தில் இருந்த இந்தியா,  தற்போது (2024-ம் ஆண்டில்),  5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், மேலும் 2027-ம் ஆண்டில் பொருளாதரத்தில் 3-ம் இடத்தை அடைய முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.  தொடர்ந்து, கல்வித்துறையில், மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக தெரிவித்த அவர்,  இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை  23- ஆக உயர்ந்துள்ளதாகக்
குறிப்பிட்டார்.   

மேலும், தேசியக் கல்விக்கொள்கை  மூலம் கல்வித்துறையின் கட்டமைப்புகள் நாளுக்கு நாள் மாறி வருவதாகத் தெரிவித்தார். மேலும். இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் தேவைகளுக்கேற்ப மாணவர்களைத் தயார்ப்படுத்துவதை தேசியக் கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.    

மேலும், மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். கருணாநிதி, அராப் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் வேல் எம். எஃப் அபுகாசன், தாய்லாந்தில் உள்ள அசம்ப்சன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பார்வதி வர்மா ஆகியோர்  பங்கேற்று  உரையாற்றினர் .  அப்போது, நிகழ்ச்சியில் பேசிய மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன், மாணவர்களை உணர்வு பூர்வமாகவும் கல்வியில் சிறந்து விளங்கவும் பள்ளி உளவியலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். 

மேலும் ஆசிரியர்கள் இரு பெரும் சவால்களை சந்தித்து வருவதாகவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது போல அவர்களின் மன ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.  

இதையும் படிக்க:   “ஆணவத்தில் இருக்கும் முதலமைச்சர் & துணை முதலமைச்சர்...” – தமிழிசை காட்டம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow