என்னது உஷாவா.? உஷாரா பேசுங்க கருணாஸ்...

ராணி ஸ்ரீ குமாருக்கு வாக்களியுங்கள் என சொல்வதற்கு பதிலாக, உஷா ஸ்ரீ குமார் என உளறினார்.

Apr 6, 2024 - 20:30
என்னது உஷாவா.? உஷாரா பேசுங்க கருணாஸ்...

தென்காசி மாவட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை  கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வேட்பாளரின் பெயரை நடிகர் கருணாஸ் மாற்றிக்கூறி உளறியதால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனிடையே அனைத்து கட்சி சார்பாகவும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை பிரசாரம் செய்து வருகிறது.

அந்தவகையில், தென்காசி மாவட்டம் இலஞ்சியில் கருணாஸ் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கருணாஸ், திமுகவை சேர்ந்த யாரும் தன்னை வற்புறுத்தி இங்கு அழைத்து வரவில்லை, பாஜகவால் தனக்கு படுத்தால் தூக்கம் வருவதில்லை. அதன் காரணமாகவே திமுகவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு வாக்களியுங்கள் என சொல்வதற்கு பதிலாக, உஷா ஸ்ரீ குமார் என உளறினார். இதனால் கூட்டத்தில் அமைதி ஏற்பட, சட்டென சுதாரித்துக்கொண்ட கருணாஸ் பெயரை மாற்றிக்கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow