கேட்டது 4.. கிடச்சது 2..! அறிவாலயத்தில் இருந்து சைலண்ட்டாக சென்ற விசிக..!

திமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளை கேட்டிருந்த நிலையில், இரண்டு தொகுதிகள் மட்டும் கிடைத்திருப்பதால், அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைலண்ட்டாக சென்றிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

Mar 8, 2024 - 20:29

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒருவழியாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை கிட்டத்தட்ட இறுதி செய்திருக்கிறது திமுக. மதிமுக, விசிகவுடனான பேச்சுவார்த்தை பல நாட்களாக இழுபறியாக நீடித்து வந்ததால், திமுக கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார் போல் இந்த இரு கட்சிகளும் சில டிமாண்ட்களை திமுகவிடம் வைத்தன. ஆனால், எதிர்கால அரசியலை கருத்தில் கொண்ட திமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக, விசிக கட்சிகளை வலியுறுத்தியது. 

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் விசிக உடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ள திமுக, விசிகவிற்கு 2 தொகுதிகளை ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது எனத் தெரிவித்தார்.

இப்படி, ஒருவழியாக தொகுதி பங்கீட்டை முடித்திருக்கும் திமுக, பிரசாரத்தில் எப்படி கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கப் போகிறது என்பதை பொறுந்திருந்த தான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow