சித்திரை ரேவதி தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கம்.. மே 6ல் உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழாவிற்கு முகூர்த்தகால் நடும் வைபவத்துடன் இன்று தொடங்கியது.  சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஆறாம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு   உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

Apr 26, 2024 - 18:34
Apr 26, 2024 - 20:22
சித்திரை ரேவதி தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கம்.. மே 6ல் உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலுக்கு திருச்சி மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

ஆண்டுதோறும் ஶ்ரீரங்கம் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ரங்கநாதர் பிறந்தது சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டியே சித்திரை மாதம் ரேவதி நட்சத்திர நாளன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்தாண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற மே 6ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.  இதற்காக வரும் 28‌ ஆம் தேதி அதிகாலை மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் சித்திரை தேர் திருவிழா உற்சவம் தொடங்கி  மே 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதையொட்டி முன்னிட்டு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று (ஏப்ரல் 26) பிற்பகலில் நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர். 

இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் உடன் இருந்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய  நிகழ்வான தேரோட்டம் மே 06 ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஆறாம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு   உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow