அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் முறையீடு 

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து நீதி​மன்ற கண்​காணிப்​புடன் கூடிய சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் எனறு உச்ச நீதி​மன்​ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் முறையீடு 
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு

உத்​தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யின் ஸ்ரீராம ஜென்​ம பூமி கோயி​லில் காணிக்கை பணம் திருடப்​பட்ட விவ​காரம் இப்​போது உச்ச நீதி​மன்​றத்தை எட்​டி​யுள்​ளது. இது குறித்து தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு அனுப் பிர​காஷ் அவஸ்தி என்ற வழக்​கறிஞர் நேற்று இ-மெயில் மூலம் 4 பக்க கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார். புகார் குறித்து எப்​ஐஆர் பதிவு செய்​ய​வும் உச்ச நீதி​மன்ற மேற்​பார்​வை​யில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட​வும் கோரி​யுள்​ளார்.

ஸ்ரீராம ஜென்​ம பூமி கோயி​லில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான காணிக்கை திருடப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளியாகி உள்​ளன. கோயி​லின் காணிக்கை தொகையை 50 ஊழியர்​கள் ஒரு குளிரூட்​டப்​பட்ட அறை​யில் அன்​றாடம் எண்ணுகின்​றனர். இவர்​களில் 24 ஊழியர்​கள் பணத்​தாள்​களை எண்ணி கட்​டு​களாக கட்​டும் பணி​யைச் செய்​கின்​றனர். இந்த ஊழியர்​களை, கோயில் அறக்​கட்​டளை ஒரு தனி​யார் நிறு​வனம் மூல​மாகப் பணி​யமர்த்​தி​யுள்​ளது.

பணத்தை எண்​ணும் அந்த 24 ஊழியர்​களின் பணி​களை அறக்கட்டளை​யைச் சேர்ந்த 12 ஊழியர்​கள் கண்காணிக்கின்றனர். தற்​போது, அந்த ஊழியர்​கள் மற்​றும் அவர்களைப் பணி​யமர்த்​திய அறக்​கட்​டளை ஆகிய அனைத்​தும் சந்​தேக வளை​யத்​துக்​குள் கொண்​டு​வரப்​பட்டு விசா​ரணை நடைபெற்று வரு​கிறது. இதற்​காக, உ.பி. அரசு அமர்த்​திய 3 பேர் கொண்ட சிறப்பு புல​னாய்​வுக் குழு அயோத்தி வந்தடைந்து இருப்பது குறிப்பிடதக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow