ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம்: நூற்றுக்கணக்கில் “காண்டம் பாக்கெட்” கண்டு அதிர்ந்து போன போலீஸ்
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ்ஜில் உள்ள கைட்கஞ்ச் பகுதியில், ஐஏஎஸ் அதிகாரி வந்தனாவிற்கு சொந்தமான வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர், அப்போது 4 இளம் பெண்களையும் மற்றும் 5 இளைஞர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விபச்சாரம் செய்த்தது அறிந்து போலீசார் அதிர்ந்து போயினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நியூ பஸ்தி கிட்கஞ்ச் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி வந்தனா திரிபாதி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வேஷ் திவேதி என்பவர் மாதம் 15,000 ரூபாய் வாடகைக்கு விட்டு இருந்தார். திரிபாதி தனது குடும்பத்தாருடன் வசிக்க வீட்டை வாடகை எடுத்ததாக கூறி இருக்கிறார்.
ஆனால் வீடு வாடகைக்கு வந்த நாள் முதல் அந்த வீட்டிற்கு இரவு நேரங்களில் இளம்பெண்களும், இளைஞர்களும் அடிக்கடி வந்து சென்று இருக்கின்றனர். இதனால் சந்தேகமடைந்து அப்பகுதி மக்கள் விபச்சாரம் சந்தேகம் அடைந்து கிட்கஞ்ச் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் பிரயாக்ராஜ் நகர ஏசிபி ராஜீவ் யாதவ் மற்றும் ஆய்வாளர் வீரேந்திர சிங் தலைமையிலான போலீசார் பிற்பகலில் வீட்டுக்கு சென்று சோதனை நடத்த முயற்சி செய்தனர். ஆனால் போலீசாரைப் பார்த்ததும் வீட்டிற்கு உள்ளே இருந்தவர்கள் கதவை பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டார்கள். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டிற்குள் அறைகளில் இளம்பெண்களும், இளைஞர்களும் ஆபாசமான நிலையில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து ஏராளமான காண்டங்களை தடயங்களை போலீசார் கைப்பற்றினர்.
இந்தச் சோதனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், வாரணாசியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பிரயாக்ராஜைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என மொத்தம் 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். ஐஏஎஸ் அதிகாரி வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்திருப்பது அப்பகுதி மக்களை மட்டுமல்ல, காவல்துறையையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
What's Your Reaction?

