மீண்டும் நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா !

போலந்தில் நடந்த கிராண்ட் செஸ் தொடர் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

May 12, 2024 - 09:09
மீண்டும் நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா !

9வது கிராண்ட் செஸ் சீசனானது, அமெரிக்காவில் 2 போட்டிகள், ருமேனியா, குரோஷியா, போலந்தில் தலா ஒரு போட்டி என 5 போட்டிகளாக இந்த ஆண்டு நடக்கும். அதன்படி இந்த செஸ் தொடரின் முதல் சீசன் போலந்து நாட்டில் தொடங்கியது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோரும், நார்வேயைச் சேர்ந் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 69வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தினார். தொடர்ந்து ஐந்தாவது சுற்றில் ருமேனிய வீரர் செவ்சென்கோவையும், 6வது சுற்றில் சக வீரர் குகேஷையும் பிரக்ஞானந்தா வென்றார்.

முதல் சுற்று போட்டி முடிவுகளின்படி சீனாவின் வெய் இ முதலிடத்திலும் இந்திய வீரர்கள் அர்ஜூன் - பிரக்ஞானந்தா ஆகியோர் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow