ரோந்து காவலர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இருசக்கர வாகனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு ரோந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Feb 5, 2024 - 15:02
Feb 5, 2024 - 15:31
ரோந்து காவலர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இருசக்கர வாகனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு 
 ரோந்து காவலர்களுக்கு  வழங்கப்பட்டுள்ள இருசக்கர  வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையின் தெரிநிலையை மேம்படுத்தவும் பெண்கள் உள்ளிட்ட குடிமக்களிடையே அதிக நம்பிக்கையும் நம்பகத் தன்மையும் ஏற்படுத்தும் முயற்சியாக மாவட்ட காவல்துறை ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 19 இருசக்கர வாகனங்களை 
 ரோந்து காவலர்களுக்கு வழங்கி உள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் 
 ரோந்து காவல் மேற்கொண்டு குற்ற செயல்களில் இருந்து பொதுமக்களை பாதிப்படையாமல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இவ்வாகனங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரோந்துக்காவலர்கள் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெறப்படும் 100 அவசர அழைப்புகளுக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்வதை குறித்தும் ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிக்கப்படும். இதன் மூலம் 100 அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் நேரத்தை முழுமையாக மேம்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் ரோந்துக்காவலர்களின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் கருவி மூலமாக மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் சம்பந்தப்பட்ட முகாம் அலுவலகங்களில் இருந்தும் கண்காணிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களை உள்ளடக்கிய பெண்கள் பீட் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் கண்காணிப்பிலும் மற்றும் 3 பீட் அமைப்பு ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது . தற்போது ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகன கண்காணிப்பை தவிர மாவட்டம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை அதிகரிப்பது, அதிக புற காவல் நிலையங்களை துவக்குவது ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

100 அவசர அழைப்புகளுக்கு மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் 7.40  நிமிடங்களில் சிறந்த பதில் அளிப்பு நேரத்தை கொண்டுள்ளது என்பதும் அழைப்பாளர்களில் 92.6 சதவீதம் நபர்கள் காவல்துறையின் பதிலளிப்பு சிறப்பாக உள்ளது என மதிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் , துணை காவல் ஆய்வாளர்கள் என பலர் பங்கு பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow