"எனது கருத்தில் தவறில்லை!" அவதூறு வழக்கு..!உ.பி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்ற ராகுல்
அவதூறு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு உத்தரப்பிரதேசம் சுல்தான்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி கர்நாடகா தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலைகாரன் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் சுல்தான்பூரில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக 36 மணி நேரத்துக்கு முன்னதாக ராகுல்காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அதன்படி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராகுல்காந்தி, தனது கருத்தில் எந்தத் தவறும் இல்லை எனவும், தான் ஒரு நிரபராதி எனவும் விளக்கமளித்தார். தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது.
What's Your Reaction?