என் பையனை கடிச்ச நாயை ஓளிச்சி வெச்சிட்டாங்க:கமிஷனர் அலுவலகத்தில் தந்தை புகார்
தனது 10 வயது மகனை நாய் கடித்ததால் நடக்க முடியாமல் தவிப்பதாகவும், காவல் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் தந்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் டேவிட் மண்டல். இவருக்கு 10 வயதில் விவியன் மண்டல் என்ற மகன் உள்ளார். சிறுவன் விவியன் கடந்த 1ஆம் தேதி வீட்டருகே கடைக்கு சென்ற போது, அப்போது வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று சிறுவனின் காலில் இரண்டு இடங்களில் ஆழமாக கடித்தது.
இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நாய் கடி தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் டேவிட் மண்டல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மகனை கடித்த நாயை உடனடியாக வேறு இடத்தில் மறைத்துவிட்டதாகவும், அவரது வீட்டில் 6 நாய்கள் வளர்த்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நாயை வளர்த்த உரிமையாளர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஆழமான நாய் கடி என்பதால் தனது மகன் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி மன உளைச்சலில் இருப்பதாகவும், உடனடியாக காவல்துறையினர் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கான உதவியை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
What's Your Reaction?

