இருள் சூழ்ந்த இடத்தில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை... சரண் அடைந்த இருவருக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரணடைந்த இருவருக்கு போலீசார் மாவுக்கட்டு போட்டிருக்கிறார்கள். மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலை வரை சென்றது குறித்து செய்தித் தொகுப்பில் பார்ப்போம்....

Sep 29, 2024 - 21:07
இருள் சூழ்ந்த இடத்தில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை...  சரண் அடைந்த இருவருக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரணடைந்த இருவருக்கு போலீசார் மாவுக்கட்டு போட்டிருக்கிறார்கள். மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலை வரை சென்றது குறித்து செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி என்ற மாசி பெரியண்ணன். இவர் தி.மு.க வேடசந்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவரது மனைவி முத்துமாரி நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். 

வியாழக்கிழமை இரவு பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிய மாசி பெரியண்ணனை,  வேடசந்தூர் சமத்துவபுரம் அருகே இருளான பகுதியில் வைத்து மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
தகவலின் பேரில் வேடசந்தூர் போலீசார் மாசி பெரியண்ணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறுநாள் காலை, அரசு மருத்துவமனை முன்பு திரண்ட மாசி பெரியண்ணனின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் திமுகவினர் கொலையாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இடைத் தொடர்ந்து மாசி பெரியண்ணன் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் நடந்த பிரச்னை ஒன்று தெரியவந்தது.

அங்கு உள்ள தனியார் மதுபான விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது மாசியின் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த மதுமோகன் , சரவணன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் அடைந்து வெளியே வந்துள்ளனர். அப்போது எதிர்தரப்பை சேர்ந்த மதுமோகன், சரவணன் ஆகியோரை மாசி பெரியண்ணன் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

விசாரணையில் இந்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார், மதுமோகன் மற்றும் சரவணனை தேடியபோது, அவர்கள் வாடிப்பட்டி காவல்நிலையத்தில் மாசி பெரியண்ணனை கொலை செய்ததாக சரணடைந்தனர். இதையடுத்து,  வேடசந்தூர் போலீசார் அவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்தனர். மதுபாரில் மாசிபெரியண்ணன் மிரட்டிச் சென்றதால், எப்படியும் தங்களைக் கொன்றுவிடுவார் என்று அஞ்சிய மதுமோகன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மாசி பெரியண்ணனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த பெரியகவுண்டம்பட்டி அருகே உள்ள பெரியகுளம் பகுதிக்கு இருவரையும் அழைத்து சென்றனர்.அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தபோது தவறி கீழே விழுந்த மதுமோகனுக்கு வலது கை எலும்பும், சரவணனுக்கு இடது கால் எலும்பும் முறிந்தது. 
இதனையடுத்து போலீசார் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போடப்பட்டது.

இதனிடையே, தொடர்ச்சியாக வேடசந்தூர் காவல்நிலைய உட்கோட்டத்தில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் இரண்டு பேருக்கு கால் முறிவு ஒருவருக்கு கை முறிவும் ஏற்பட்டிருப்பது சந்தேகத்தைப் ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow