புதுச்சேரியில் புதிய அமைச்சராக பதவியேற்றார் திருமுருகன்... பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை...

2 முறை தள்ளிப்போன பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது

Mar 14, 2024 - 12:51
புதுச்சேரியில் புதிய அமைச்சராக பதவியேற்றார் திருமுருகன்... பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை...

புதுச்சேரியில் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆளும் அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

4 மாதங்களுக்கு மேலாக அமைச்சர் பதவி காலியாகவே இருந்த நிலையில், காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனை அமைச்சராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். 2 முறை தேதி அறிவிக்கப்பட்டு பதவியேற்பு தள்ளிப்போன நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow