ஏசி பெட்டியில் புகை வந்ததால் திருவனந்தபுரம் ரயில் நிறுத்தம்

ரயில்வேதுறை விரைந்து வந்த சிறிது நேரம் அந்த பெட்டிக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்தனர்.

Nov 22, 2023 - 12:07
Nov 22, 2023 - 14:01
ஏசி பெட்டியில் புகை வந்ததால் திருவனந்தபுரம் ரயில் நிறுத்தம்

திருவனந்தபுரம் ரயிலில் ஏசி பெட்டியில் புகை வந்ததால் நெமிலிச்சேரி அருகே ரயில் நிறுத்தப்பட்டதால்  பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

திருவந்தபுரத்திலிருந்து நேற்று இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் இன்று காலை நெமிலச்சேரி ரயில் நிலையம் அருகே வரும்போது ஏசி பெட்டியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக்கண்ட ரயிலின் காட் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ரயிலை நிறுத்தினர்.பின்பு ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த ஊழியர்கள் சிறிது நேரம் அந்த பெட்டிக்கு செல்லக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 20 நிமிடம் காலதாமதமாக அந்த ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னைக்கு சென்றது.

ஏசி பெட்டியில் இருந்து புகை வந்ததால் இதைக்கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலில் இருந்து கீழே இறங்கினர்.அந்த பெட்டிக்கு செல்லக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்பு மீண்டும் அந்த திருவனந்தபுரம் ரயில் சென்னை சென்ட்ரலுக்கு சென்றது.இதனால் அங்கு அரை மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow