வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், நாளை (பிப்.17), நாளை மறுநாள் (பிப்.18), வார விடுமுறை நாள் என்பதாலும், திங்கட்கிழமை (பிப்.19) முகூர்த்த நாள் என்பதாலும் இன்று சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், இந்த வாரம் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?