இரக்கமற்ற செயல்.. பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய கொடூரம்..

எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Feb 16, 2024 - 08:00
Feb 16, 2024 - 08:11
இரக்கமற்ற செயல்.. பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய கொடூரம்..

பூவிருந்தவல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையைக் குப்பையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

பூவிருந்தவல்லி, ராமானுஜர் தெருவில் தனியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இதன் அருகிலேயே குப்பை கொட்டும் இடம் உள்ள நிலையில் இந்த பகுதியில் இருந்து பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டது. இதை கேட்ட யுவராணி என்ற பெண் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது, குப்பை தொட்டியில் குழந்தை அழுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பைத் தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் இருந்த பெண் குழந்தையை மீட்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணியாளர்கள் கொண்டு சென்றனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையை 2 தினங்களுக்கு முன்பே இங்கு வீசி சென்றதும், 2 தினங்களாகக் குழந்தை அழுதபடி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

பிறந்த சில தினங்களே ஆன பெண் குழந்தையை ஈவு இரக்கம் இல்லாமல் குப்பைத் தொட்டியில் வீசிய நிலையில் உயிருக்குப் போராடிய குழந்தையைப் பெண் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow