பெங்களூரு ஓபன் டென்னிஸ்-காலிறுதியில் சுமித் நாகல், ராமநாதன்

மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ராமநாதன், தென்கொரியாவின் சியோங் சான் ஹாங்கை எதிர் கொள்கிறார்.

Feb 16, 2024 - 07:30
Feb 16, 2024 - 07:36
பெங்களூரு ஓபன் டென்னிஸ்-காலிறுதியில் சுமித் நாகல், ராமநாதன்

பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் சுமித் நாகல், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனையும், தென்கொரியாவின் சியோங் சான் ஹாங்கை, ராமநாதனும் எதிர் கொள்கின்றனர்.

அண்மையில் நடைபெற்ற சென்னை ஓபன் சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் லுகா நார்டியை வீழ்த்தி இந்தியாவின் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதையடுத்து சுமித் நாகல், முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் முன்னேறி, 98-வது இடத்தை பிடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஏடிபி டூர் தொடரான பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டுள்ள சுமித் நாகல், நேற்று (பிப். 15 ) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் சாக் லாங் வோங்கை எதிர்கொண்டார். இதில் 6-2, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார் சுமித் நாகல். இன்று (பிப். 16) நடைபெறும் காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் லால்டனை சுமித் நாகல் எதிர்கொள்கிறார். 

இதேபோல் மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ராமநாதன், தென்கொரியாவின் சியோங் சான் ஹாங்கை எதிர் கொள்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow