அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென மழை பெய்யும்.. வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
தமிழ்நாட்டில் சுள்ளென வெயில் அடித்து வரும் நிலையில் ஏப்ரல் முதல் ஜில்லென மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பங்குனி மாதத்தில் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. கோடை மழை பெய்தால் மட்டுமே பூமி குளிரும். இரவு நேரங்களில் கூட புழுக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள் புன்னகைக்கும் வகையில் கூலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
வானிலை ஆய்வு மையம் இன்ற வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதியன்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் தேதிகளில்
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று 28.03.2024 முதல் 01.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?