தமிழகம் வரும் அமித் ஷா... அனல் பறக்கும் பரப்புரை.. ஏப்ரல் 4ல் பாஜக பக்கா பிளான்

ஏப்ரல் 4-ம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவை தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டம்.

Mar 28, 2024 - 15:30
தமிழகம் வரும் அமித் ஷா... அனல் பறக்கும் பரப்புரை.. ஏப்ரல் 4ல் பாஜக பக்கா பிளான்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் 2 நாட்கள் பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதனிடையே ஆட்சியை தக்க வைப்பதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது மொத்த பலத்தையும் செயல்படுத்தி வருகிறது. 

அதேபோல எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு கடுமையாக போராடி வருகிறது. தமிழ்நாட்டில் 3வதாக பெரும் கூட்டணி அமைத்துள்ள தமிழக பாஜக, 39 தொகுதிகளிலும் தங்கள் பலத்தை நிரூபிக்க கங்கணம் கட்டி களத்தில் இறங்கியுள்ளது. 

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் அவர், மதுரை மற்றும் சிவகங்கை தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பரப்புரை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் சென்று பரப்புரை செய்து வருகின்றன. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்கு சேகரித்து பரப்புரையில் ஈடுபட்டது  மக்கள் மத்தியில் அக்கட்சி மீதான செல்வாக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு வர இருப்பது அரசியல் களத்தில் நிலவும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow