சபரிமலையில் டன் கணக்கில் நெய் திருட்டு: ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி
சபரிமலை ஐயப்ப சன்னிதானத்தில் ஆதிய சிஷ்டம் நெய் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடு ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல காலம் மற்றும் மகரஜோதிக்காக 60 நாட்கள் நடை திறக்கப்படும் நாட்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பதினெட்டாம்படி ஏரி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். ஐயப்பனை தரிசனம் செய்து முடித்த பின்னர் இருமுடியில் தேங்காயை உடைத்து அதில் சேமிக்கப்பட்டு இருக்கும் நெய்யை எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
சபரிமலைக்கு மாலையிடும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனுக்காக கொண்டு செல்லும் இருமுடி கட்டு நெய்யானது மிகப் புனிதமாக கருதப்படும். நெய்யாபிஷேகம் செய்ய வாய்ப்பு கிடைக்காத பக்தர்கள் ஆதிய சிஷ்டம் நெய்யை வாங்கி தாங்கள் கொண்டு வந்துள்ள இருமுடி நெய்யுடன் கலந்து எடுத்துச் செல்வார்கள். தேவசம் போர்டால் ஆதிய சிஷ்டம் நெய் 100 மில்லி லிட்டர் உறைகளில் விற்கப்படுகிறது. ஒவ்வொரு பாக்கெட்டும் ரூ.100 ஆகும். நெய் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கோயில் சிறப்பு அதிகாரி அதைப் பெற்று விற்பனைக்காக கவுண்டரிடம் கொடுக்கிறார்.
விற்பனை செய்யப்பட்ட பாக்கெட்டின் படி தொகை தேவஸ்வம் கணக்கில் செலுத்தப்படாததால், தேவஸ்வம் விஜிலென்ஸ் நடத்திய ஆய்வின் போது முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆண்டு மண்டலத்தின் போது விற்பனைக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில்16 லட்ச ரூபாய் மதிப்புள்ள 16,000 நெய் பாக்கெட்டுகள் முறைகேடுகள் நடந்துள்ளன. டிக்கெட்டுகள் மற்றும் நெய் விநியோகத்திற்கு தனித்தனி கவுண்டர்கள் உள்ளன. தேவசம்போர்டுக்கு சொந்தமான பல்வேறு கோயில்களில் பணி புரியும் ஆட்கள் நெய் கவுண்டர்களில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேவசம் போர்டு விஜிலென்ஸ் செய்த ஆய்வில் ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்டுகள் நிரப்பப்பட்டன, எத்தனை விநியோகத்திற்காக வழங்கப்பட்டன, விற்கப்பட்டன, மீதமுள்ள தொகை பற்றிய துல்லியமான பதிவுகளை சோதனை செய்தபோது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நெய் பாக்கெட்டுகளை எண்ணுவதில் பிழை இருப்பதாகக் கூறி தேவசம்போர்டு அதிகாரிகள் மூடி மறைக்கின்றனர். பாக்கெட்டுகளில் நெய் நிரப்புவது முதல் விநியோகம் வரை அனைத்து நிலைகளிலும் துல்லியமான பதிவேடுகளைப் பராமரிக்கத் தவறியதால் மீண்டும் மீண்டும் முறைகேடுகள் ஏற்பட வழிவகுக்கிறது. தேவஸ்வம் விஜிலென்ஸ் விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்தப் பிரச்சினையைக் மூடி மறைக்க அதிகாரிகள் மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
What's Your Reaction?

