சபரிமலை ஐயப்பன் கோவிலில் டன் கணக்கில் தங்கம் திருட்டு.. நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த திட்டம்?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டன் கணக்கில் தங்கம் திருட்டு. பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம் திருடப்பட்டுள்ளது ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் தங்களின் வேண்டுகோள்கள் நிறைவேறிய பின்னர் ஐய்யப்பனிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க உண்டியலில் பணம், பொருள், தங்கம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் (கருவறை வாயிலில்) உள்ள துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள், 2019-ல் நடைபெற்ற பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளின் போது நீக்கப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அந்தத் தகடுகளை சிலைகளில் பொருத்திய போது, சுமார் 4 கிலோ எடையுள்ள தங்கம் மாயமானது.
4 கிலோ தங்கம் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் மொத்த கேரளாவை மட்டும் இல்லாமல், ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தங்கம் திருடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்கனவே பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பி.எஸ். வாசு உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாகத்தான் நடிகர் ஜெயராமை விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அழைத்துள்ளது. மேலும் இவர் தொடர்ந்து சபரிமலைக்குச் செல்வார் என்பதால், அவரிடத்தில், சாட்சியாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
What's Your Reaction?

