அந்த மனசு தான் கடவுள்.. 15 சவரன் நகை.. 50 ஆயிரம் பணம்.. தவறவிட்டவரிடம் ஒப்படைத்த பஸ் கண்டக்டர்.. ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி

Apr 29, 2024 - 11:11
அந்த மனசு தான் கடவுள்.. 15 சவரன் நகை.. 50 ஆயிரம் பணம்.. தவறவிட்டவரிடம் ஒப்படைத்த பஸ் கண்டக்டர்.. ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி

ராமநாதபுரத்தில் பெண் ஒருவர் அரசுப்பேருந்தில் தவறவிட்ட 15 சவரன் நகை, ரூ.50ஆயிரம் பணத்தை போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து உச்சிப்புளி சென்ற ரெஜினா பேகம் என்பவர், தான் கொண்டு சென்ற பையை பேருந்திலேயே மறதியாக விட்டுவிட்டு இறங்கிவிட்டார். அதில் 15 சவரன் நகை மற்றும் 50,000 பணம் இருந்துள்ளது. நகையையும், பணத்தையும் தவறவிட்டதை உணர்ந்து பதற்றமடைந்த ரெஜினா பேகம், இது குறித்து தன் தம்பியிடம் தகவல் தெரிவித்தார். உடனே அவர் ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்று விசாரித்தார்.

ஆனால், அதற்குள்ளாக அரசுப் பேருந்து, மானாமதுரை புறப்பட்டு சென்றிருப்பதாக பேருந்து நிலைய ஊழியர்கள் கூறியதையடுத்து, அங்கிருந்த வாகனத்தில் வேகமாக புறப்பட்ட அவர், மதுரை ரிங் ரோடு பகுதிக்கு முன்னதாகவே சென்று, குறிப்பிட்ட அந்த பேருந்துக்காக காத்திருந்தார்.

ஆனால், அதற்கு முன்பாகவே ராமநாதபுரம் பேருந்து நிலைய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துநருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, அந்த நடத்துநர், சம்பந்தப்பட்ட பெண் தவறவிட்ட நகை மற்றும் பணம் அடங்கிய பையை, பேருந்தில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார். பின்னர் நகையையும், பணத்தையும் ராமநாதபுரம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நடத்துநர், சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தார்.

15 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை பெண் கவனக்குறைவாக தவறவிட்ட நிலையில், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சாதுர்யமாக செயல்பட்டு, 2 மணி நேரத்திற்குள்ளாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow