ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட டி.ஆர்.பாலு விருப்பமனு...
சென்னை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட டி.ஆர்.பாலு விருப்பமனு சமர்ப்பித்தார். அமைச்சர் த.மோ.அன்பரசன் அதனை முன்மொழிந்தார்.
சென்னை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட டி.ஆர்.பாலு விருப்பமனு சமர்ப்பித்தார். அமைச்சர் த.மோ.அன்பரசன் அதனை முன்மொழிந்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது விருப்ப மனுக்களை அந்தந்த கட்சி அலுவலகங்களில் சமர்ப்பிப்பது வழக்கம். திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது விருப்பமனுவை அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு, சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு உள்ளிட்ட பலர் விருப்பமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். விருப்ப மனுவை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மேலும் பல அரசியல் பிரபலங்கள் விருப்பமனு சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட தனது விருப்பமனுவை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்ததை அமைச்சர் த.மோ.அன்பரசன் முன்மொழிந்தார்.
What's Your Reaction?