அருணாசலேஸ்வரர் கோவில்: 50 லட்சம்..750 கிராம் மகரகண்டி.. பக்தரின் நெகிழ்ச்சி செயல்
அண்ணாமலையாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான வைரக்கல், பச்சைக்கல், கெம்புக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய 750 கிராம் அளவிலான தங்க ஆபரணங்களை பக்தர் ஒருவர் வழங்கியுள்ள செய்தி வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாநகரில் உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அதே திருவண்ணாமலை மாநகரில் உள்ள குமரக்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசிரியர் குமார்.
குமாரும் அவரது குடும்பத்தினரும், 750 கிராமில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தினால் ஆன மகரகண்டி என்று அழைக்கக்கூடிய பல்வேறு கெம்புக்கல், பச்சைக்கல், வைரக்கல், மரகத பச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட தங்க மாலையை இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து பின்னர் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
50 லட்சம் மதிப்பிலான நகையினை கோவிலுக்கு வழங்கிய பக்தரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?






