தஞ்சையில் கொட்டும் மழையிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

தஞ்சை நகர பேருந்துகள் இன்று காலை நேரப்படி 10 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டன

Jan 9, 2024 - 23:20
தஞ்சையில் கொட்டும் மழையிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தஞ்சை ஜெபமாலைபுறம் பணிமனை முன்பு கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள பணிமனை முன்பு தொழிலாளர்கள் கொட்டும் மழையிலும் போராட்டத்தை ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை  தொடர்ந்துள்ளனர்.

ஓய்வு பெற்ற 96 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதனை முக்கிய கோரிக்கையாக வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்று காலை நேரப்படி தஞ்சை நகர பேருந்துகள் 10 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டன.போராட்டத்தில் தொமுச ஐ.என்.டி.யூசி  தவிர பிற தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow