தேனியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு-திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் 

Feb 8, 2024 - 11:15
தேனியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு-திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் 

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுட்டனர்.

பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தேனி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தார்.இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் செயலை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்வதை கண்டித்தும்,இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடிகளை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த வாரம் மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையின்போது, இதேபோல் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow