தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுனம் ராசிக்காரர்களே..டென்ஷன் மட்டும் வேண்டாம்

மிதுனம் ராசியினருக்கான தமிழ்ப்புத்தாண்டு பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

Apr 12, 2025 - 11:47
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுனம் ராசிக்காரர்களே..டென்ஷன் மட்டும் வேண்டாம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுனம் ராசி

மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டான விஸ்வாவசு வருடம் ஜோதிடக் கணக்குகளின்படி 13.4.2025 அன்று நள்ளிரவு 2.58 மணிக்குப் பிறக்கிறது. அதேசமயம் 14.4.2025 அன்றே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. மிதுனம் ராசியினருக்கான தமிழ் புத்தாண்டு பலன் விவரங்கள் பின்வருமாறு-

மிதுனம்: பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டிய ஆண்டு. பணியிடத்தில் தேவையற்ற டென்ஷனைத் தவிருங்கள். இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமாகலாம். நிதானம், பொறுமை இருந்தால் அவற்றை நிச்சயம் பெறலாம். எந்த சமயத்திலும் புதிய பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டாம்.

இல்லத்தில் இறுக்கமான சூழல் மறையும். விடுபட்டிருந்த முன்னோர் வழிபாட்டினைச் செய்ய நேரம் அமையும். வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது. சுபகாரியங்களில் முழுமையான கவனம் முக்கியம். கர்ப்பிணிகள் கூடுதல் கவனமாக இருங்கள்.

செய்யும் தொழிலில் சீரான உழைப்பு இருந்தால், சிரமங்கள் மறையும். பரம்பரை வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும். கூட்டுத் தொழிலில் நேரடிக் கவனம் செலுத்துவது நல்லது. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு உயர்வுகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். மேலிடத்தின் ஆசியால் பதவி, பொறுப்பு உயரும்.

மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படித்தால், சாதனைகள் செய்யவும் வாய்ப்பு உண்டு. கலை, படைப்புத் துறையினர் சிலருக்கு பலநாள் கனவுகள் நனவாகி, சந்தோஷம் அதிகரிக்கும்.

பயணத்தில் கவனச்சிதறல் கூடவே கூடாது. பரம்பரை நோய்கள், ரத்த அழுத்த மாற்றம், சர்க்கரை உபாதை, அலர்ஜி, சுவாசப் பிரச்னைகள் வரலாம். பட்டீஸ்வரம் துர்க்கையை தினமும் மனதினால் வணங்குங்கள். வாழ்க்கை செழிக்கும்.

Read more: மேஷ ராசிக்கான தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்: தேடி வரும் பதவியும்.. ஊதிய உயர்வும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow