வாய்ப்பில்லை ராஜா.. கை விரித்த தேர்தல் ஆணையம்.. திருச்சியில் சுற்றாமல் போனா மதிமுகவின் பம்பரம்
மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கை விரித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் வைகோ. செத்தாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டு பேசியிருந்த நிலையில் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனது மதிமுகவிற்கு சற்றே பின்னடைவுதான்.
வாய்ப்பில்லை ராஜா.. கை விரித்த தேர்தல் ஆணையம்.. திருச்சியில் சுற்றாமல் போனா மதிமுகவின் பம்பரம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னதாகவே அரசியல் பிரச்சார களத்தில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு விறுவிறுப்பாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பல முனை போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக,கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது. இதுதவிர, நாமக்கல்லில் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தனி சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விருப்பப்பட்டார். ஆனால் ஆரம்பம் முதலே தனி சின்னம்தான் என்பதில் உறுதியாக கூறி விட்டார் வைகோ.
திராவிட முன்னேற்ற கழகத்தின் போர் வாளாக இருந்தவர் வைகோ. வாரிசு அரசியலுக்கு எதிராக ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் வைகோ. அப்போதைய திமுக தலைவர் கருணாநிதிக்கும் வைகோவிற்கும் கசப்புணர்வு ஏற்பட்டது. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, கடந்த 1994ஆம் ஆண்டு இருந்து மதிமுகவை தொடங்கினார். முதன் முதலாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதன்முதலில் களமிறங்கியது மதிமுக. பம்பரம் சின்னத்தில் தேர்தலை சந்தித்தது. இடதுசாரிகள் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஆட்சி ஒரே ஆண்டில் கவிழ்ந்தது. 1999 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக - திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 6% வாக்குகளையும் பெற்றது. பம்பரம் சின்னம் மதிமுகவிற்கு நிரந்தரமானது.
கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதிமுக தனித்து களம் கண்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு வாங்கியும் சரிந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மதிமுக 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு மதிமுகவின் மாநில கட்சி அந்தஸ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இதோடு நிலையான தேர்தல் சின்னம் கிடைக்காது என்றாலும் அடுத்து வந்த தேர்தல்கள் சிலவற்றில் பம்பரம் சின்னத்தை விண்ணப்பித்து பெற்றுக்கொண்டது மதிமுக.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைத்த மதிமுக 25 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்ட மதிமுக பம்பரம் சின்னத்தில் களம் கண்டது. கடந்த லோக்சபா தேர்தலின் போது மதிமுகவிற்கு சோதனை தொடங்கியது. கணேசமூர்த்தி திமுகவில் உறுப்பினராகித்தான் லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பியானர்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் 6 தொகுதியில் போட்டியிட்ட வைகோ வேறு வழியின்றி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அதற்கான காரணத்தையும் அப்போது சொன்னார் வைகோ. அப்போதே திமுகவில் மதிமுகவை இணைக்கப்போவதாக செய்திகள் வெளியானது. நாளடைவில் அந்த செய்தியை மறுத்தார் வைகோ.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிடுகிறது மதிமுக. மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் பேசும் போதும் தனி சின்னதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர், துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டு ஆவேசமடைந்த துரை வைகோ, அண்ணாவும் திமுக, கருணாநிதியும் திமுக, எங்க அப்பா வைகோவும் திமுக. திமுகவை தான் மதிக்கிறேன். ஆனால் செத்தாலும் தங்களது தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்றார். எங்களை புண்படுத்தாதீர்கள். வேண்டுமென்றால் நீங்களே உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள். நாங்கள் 40 தொகுதிகளிலுட் பிரச்சாரம் மட்டுமே செய்கிறோம் என்று ஆவேசமாக பேசினார். இந்த விசயம் திமுக தலைமையின் காது வரைக்கும் கொண்டு செல்லப்பட்டது.
உடனே வைகோவிற்கு போன் செய்த ஸ்டாலின், எத்தனையோ தடைகளைத் தாண்டிதான் திருச்சியில் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. துரை வைகோ பேசும் வார்த்தைகளில் நிதானத்தை கையாளச்சொல்லுங்கள் என்று கூறினாராம். துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்யப்போனபோதும் திமுகவின் பெரிய தலைகள் யாரும் உடன் செல்லவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் தங்களின் சின்னமான பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்காத நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்த உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விடாது ஹைகோர்ட் கதவை தட்டினார் வைகோ. அவசர முறையீட்டு மனுவை வைகோ தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படுமா என்று இன்று காலை ஒன்பது மணிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவதற்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் இமெயில் மூலம் ஹைகோர்ட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் 2:15 மணிக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
"சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார் துரை வைகோ. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார் துரை வைகோ. லோக்சபா தேர்தலில் பம்பரம் சின்னம் கிடைக்கும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மதிமுக வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் போர் வாளாக இருந்தவர் வைகோ. வாரிசு அரசியலுக்கு எதிராக ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் வைகோ. அப்போதைய திமுக தலைவர் கருணாநிதிக்கும் வைகோவிற்கும் கசப்புணர்வு ஏற்பட்டது. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, கடந்த 1994ஆம் ஆண்டு இருந்து மதிமுகவை தொடங்கினார். முதன் முதலாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதன்முதலில் களமிறங்கியது மதிமுக. பம்பரம் சின்னத்தில் தேர்தலை சந்தித்தது. இடதுசாரிகள் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஆட்சி ஒரே ஆண்டில் கவிழ்ந்தது. 1999 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக - திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 6% வாக்குகளையும் பெற்றது. பம்பரம் சின்னம் மதிமுகவிற்கு நிரந்தரமானது.
கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதிமுக தனித்து களம் கண்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு வாங்கியும் சரிந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மதிமுக 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு மதிமுகவின் மாநில கட்சி அந்தஸ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இதோடு நிலையான தேர்தல் சின்னம் கிடைக்காது என்றாலும் அடுத்து வந்த தேர்தல்கள் சிலவற்றில் பம்பரம் சின்னத்தை விண்ணப்பித்து பெற்றுக்கொண்டது மதிமுக.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைத்த மதிமுக 25 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்ட மதிமுக பம்பரம் சின்னத்தில் களம் கண்டது. கடந்த லோக்சபா தேர்தலின் போது மதிமுகவிற்கு சோதனை தொடங்கியது. கணேசமூர்த்தி திமுகவில் உறுப்பினராகித்தான் லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பியானர்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் 6 தொகுதியில் போட்டியிட்ட வைகோ வேறு வழியின்றி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அதற்கான காரணத்தையும் அப்போது சொன்னார் வைகோ. அப்போதே திமுகவில் மதிமுகவை இணைக்கப்போவதாக செய்திகள் வெளியானது. நாளடைவில் அந்த செய்தியை மறுத்தார் வைகோ. 1996 முதல் பம்பரம் சின்னத்தில் களம் கண்ட மதிமுக தனது 28 ஆண்டு கால வரலாற்றில் பம்பரம் சின்னத்தை இழந்துள்ளது. திருச்சியில் பம்பரம் சுற்றாமல் போய் விட்டது மதிமுகவிற்கு பெரும் பின்னடைவுதான்.
What's Your Reaction?