வைகோ நடைபயணம் : காங்கிரசு புறக்கணிப்பு-கூட்டணியில் சலசலப்பு
திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார்.
அதில், "வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம்தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபயணம் சென்று இருக்கிறார் அண்ணன் வைகோ. காலம் தோறும் இளைய தலைமுறை நன்மைக்காகவும் எதிர்காலத்தின் நன்மைக்காகவும் செயலாற்றுவது திராவிட இயக்கம்.
தள்ளாத வயதிலும் தொண்டு செய்தவர் பெரியார். திராவிட இயக்க பல்கலையில் படித்தவர்தான் வைகோ. கலைஞரின் பக்கத்தில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு கலைஞர் நடைபயணம் சென்றபோது அவருடன் சென்றவர்தான் வைகோ. 83 வயதிலும் சமூக வளைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர். வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது.
தலைவர்கள் மக்களிடம் போய் தங்களது கருத்துகளை கூற நடைபயணம் உதவும். நடைபயணத்தின் நியாயம் குறித்து மக்கள் அப்போதுதான் பேசுவார்கள். முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்து நடைபயணத்தை தொடங்கியுள்ளார் வைகோ. வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும்போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது. என பேசினார்.
வைகோவின் நடைபயணத்தில் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரசு சார்பில் யாரும் கலந்து கொள்ள புறக்கணித்தனர். நடைபயண விழாவில் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம் பெற்றிருந்த காரணத்தில் காங்கிரசு வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்தாக சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

